• Talk To Astrologers
  • Brihat Horoscope
  • Personalized Horoscope 2024
  1. மொழி :

பொங்கல் 2041 தேதி மற்றும் முகூர்த்தம்

2041 இல் தை பொங்கல் எப்போது ?

14

ஜனவரி, 2041

(திங்கள் கிழமை)

பொங்கல்

Thai Pongal Sankranti Time For New Delhi, India

Sankranti Moment :
11:09:28

வாருங்கள் 2041 ஆம் ஆண்டு பொங்கல் எப்போது என்று தெரிந்து கொள்வோம் அல்லது பொங்கல் 2041 ஆம் தேதி மற்றும் முகூர்த்தம்.

பொங்கல் விழா தெற்கு இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான விழாவாகும். அதே நேரத்தில் வாட இந்தியர்கள் சூரியன் பகவான் உத்ராயன் மற்றும் மகர சங்கராந்தி விழாவக கொண்டாடுகிறார்கள். தமிழ் நாட்டில் பொங்கல் விழா மிக உற்சாகமாக கொண்டாடுகிகள். பொங்கல் விழா அன்று தாய் முதல் நாள் புது வருட பிறப்பாக கொண்டாடுகிறார்கள். பொங்கல் திருவிழா கிட்டத்தட்ட ஆயிரம் வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் நாடு மட்டுமின்றி இலங்கை, கனடா, மற்றும் அமெரிக்கா போன்ற மற்ற சில நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அவர்களின் பாரம்பரியமான பொங்கல் திருவிழாவை மிக உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றன.

பொங்கல் முக்கியத்துவம்

பொங்கல் விழா விவசயிகள் அடிப்படையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய பஞ்சாங்கம் அடிப்படையாக இந்த திருவிழா தமிழ் தை மதம் முதல் நாளில் யெனில் ஜனவரி 14 மற்றும் 15 தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனவரி மதம் விவசயின் பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை செய்யப்படுகிறது. பூமியின் ஆசிர்வாதத்தின்படி அமோகமான விளைச்சலைக் கண்டு விவசயிகள் மிகுந்த சந்தோசம் அடைவார்கள் மற்றும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்திரன் பகவான், சூரியன் பகவான் மற்றும் விலங்குகள் சொத்து அல்லது பசு மற்றும் காளைமாடு பூஜை செய்து வணங்கி வழிபடுவார்கள். பொங்கல் திருவிழா கிட்டத்தட்ட 3 அல்லது 4 நாட்களுக்கு கொண்டாடப்டுகிறது. இந்த சமயத்தில் வீட்டை சுத்தம் மற்றும் அலங்காரம் தொடங்கிவிடும். தமிழர்களின் பண்பாடு பொங்கல் திருவிழா தினத்தன்று தீய பழக்கவழக்கங்களை கைவிடுவார்கள். இது பாரம்பரிய போகி என்று அழைக்கப்படுகிறது.

பொங்கல் திருவிழா அன்று மத காரியங்கள் மற்றும் பிற நிகழ்வுகள்

1.  பொங்கல் விழா அன்று முதல் நாள் இந்திர பகவானை வணங்குவார்கள் இதை போகி பொங்கல் என்று கூறப்படுகிறது. இந்திர பகவான் மழைக்கு முக்கிய பொறுப்பு உடையவர் இதனால் அவருக்கு பூஜை செய்ய படுகிறது. வயலில் பச்சை பசுமையாக செழிப்பாக இருக்க வேண்டும் என்று வணங்க படுகிறது. இந்த நேரத்தில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை நெருப்பில் போட்டு எரியவைப்பார்கள். இந்த நேரத்தில் பெண்கள் நெருப்பை சுற்றி நின்று கும்மி அடிச்சு பட்டு படுவார்கள். இந்த பாரம்பரியத்தை போகி விழா என்று சொல்ல படுகிறது.
2.  சூரியன் உத்ராயண் பிறகு அடுத்த நாள் சூரிய பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொங்கல் பெயரில் பல வகையான பொங்கல் செய்ய படுகிறது. இந்த சமயத்தில் மக்கள் திறந்த வெளியில் சூரியன் முன்னாள் மண்பானையில் மேல் பகுதியில் மஞ்சள் நிறம் நுழை கட்டி அதில் அரிசிமற்றும் பருப்பு போட்டு வேகவைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் பொழுது பால் மற்றும் நெய் அதில் ஊற்றி பொங்கொலோ பொங்கல் என்று கூச்சல் இடுவார்கள். பொங்கல் பொங்கி வரும் பொழுது சமுதாயத்திற்கும் மற்றும் நாட்டிற்கும் நன்மை நடக்கும் என்று ஒரு பாரம்பரியமாகும். பொங்கல் தயாரான பிறகு சூரிய பகவானுக்கு வாழ இலையில் வைத்து வழிபடுவார்கள். இந்த நேரத்தில் ஒருவர்க்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டும் உணவுகள் பராமரிக்கொண்டும் மற்றும் மற்றவர்களின் இன்பம் துன்பங்களில் பங்கேற்று கொள்வார்கள்.
3.  பொங்கல் திருவிழா 3வது நாள் மாட்டு பொங்கல் அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
4.  காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

இந்த பொங்கல் விழா தமிழ் நாட்டில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆனாலும் இந்த விழா ஆண்மிகம் மற்றும் மதத்திற்கு முக்கியத்துவம் தரும் மனித சமுதாயத்திற்கு முக்கியமான விழாவாகும். இந்த விழாவில் மாட்டு பாலில் பொங்கி வருவதை முக்கியமாக கருதுகின்றனர். பால் பொங்கல் பொங்குவது புனிதமானது போலவே, ஒவ்வொரு மனித மனமும் தூய புனிதமன பிரகாசமாக இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

AstroSage on Mobile ALL MOBILE APPS

AstroSage TV SUBSCRIBE

      Buy Gemstones

      Best quality gemstones with assurance of AstroSage.com

      Buy Yantras

      Take advantage of Yantra with assurance of AstroSage.com

      Buy Navagrah Yantras

      Yantra to pacify planets and have a happy life .. get from AstroSage.com

      Buy Rudraksh

      Best quality Rudraksh with assurance of AstroSage.com